திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியது பற்றி...

News image

ராகுல் காந்தி / மு.க. ஸ்டாலின் - கோப்புப் படங்கள்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:15 pm IST

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை பேசினார்.

மக்களவை - பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்கள் மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் முன்மொழியப்பட்டுள்ள மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு காங்கிரஸ், திமுக, சமாஜவாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கருப்புக் கொடியேற்றி, மசோதாவின் நகலை எரித்துப் போராட்டம் நடத்தினார்.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகிறது. ஆனால், இதுவரை கூட்டணிக்கு ஆதவராக பிரசாரம் செய்ய ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வராதது பெறும் தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Delimitation Bill: M.K. Stalin talks with Rahul!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.