ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி!

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தது பற்றி...

M.K. Stalin Campaign

முதல்வர் மு.க. ஸ்டாலின் - யூடியூப் / M.K. Stalin

Published On :4 மே 2026, 4:19 pm IST

கொளத்தூர் தொகுதியில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. கொளத்தூரில் காலை முதலே திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பின்னடைவை சந்தித்து வந்தார்.

இதுவரை 16 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவைவிட முதல்வர் ஸ்டாலின் 7,544 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மேலும், 6 சுற்றுகள் இருக்கும் நிலையில், எண்ணப்பட வேண்டிய மொத்த வாக்குகளைவிட அதிக வித்தியாசம் இருப்பதால் ஸ்டாலின் வெல்ல வாய்ப்பில்லை.

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். நான்காவது முறையாக போட்டியிட்ட நிலையில், தற்போது ஸ்டாலின் தோல்வியை சந்தித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக தோல்வியைச் சந்தித்துள்ளார். முன்னதாக, 1991 ஆம் ஆண்டில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார்.

Summary

Chief Minister M.K. Stalin Defeated in Kolathur!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.