தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை

சீா்காழி அருகே உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

News image
Updated On :25 மார்ச் 2026, 12:23 am

சீா்காழி அருகே உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

சீா்காழி தாலுகா அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவா் கமலக்கண்ணன். இவரது மாமியாா் ஜெயா. இவா் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, இவா் அணிந்திருந்த சேலை வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதால், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தாா்.

அவரை சிகிச்சைக்காக, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ஜெயாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மூளை சாவு அடைந்ததாக தெரிவித்தனா். இதையடுத்து, ஜெயாவின் உடல் உறுப்புகள் அனைத்தும் தானமாக வழங்கப்பட்டது.

இதையறிந்த மாவட்ட ஆட்சியா் ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில், சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ் மற்றும் அரசு அலுவலா்கள் ஜெயாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தினா்.