எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை: 26-ல் நேர்முகத் தேர்வு
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் "Electronics Corporation of India Limited" இல் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு வரும் 26 ஆம் தேதி நடத்தப்படும்


ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் "Electronics Corporation of India Limited" இல் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு வரும் 26 ஆம் தேதி நடத்தப்படும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதற்கு தகுதியானவர்கள் அன்றைக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
பணி: Technical Officer - 04
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,000
பணி: Scientific Asst - A - 04
சம்பளம்: மாதம் ரூ.16,978
பணி: Junior Artisan - 03
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,418
தகுதி: கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற பிரிவுகளில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வருபவர்கள் www.ecil.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.07.2017
மேலும், நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், வயதுவரம்பு சலுகை, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ecil.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...