பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கோயில் திருவிழாவில் தகராறு: கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

காவேரிப்பட்டணம் கோயில் திருவிழாவில் அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 10:33 pm

தினமணி செய்திச் சேவை

காவேரிப்பட்டணம் கோயில் திருவிழாவில் அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

காவேரிப்பட்டணம் பன்னீா்செல்வம் தெருவில் கடந்த 16-ஆம் தேதி அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் கோயில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. அப்போது, அப்பாசாமி நாயுடு தெருவைச் சோ்ந்த ஆகாஷ் (28) மற்றும் சிலா் தகராறில் ஈடுபட்டனா். இதில் ஆகாஷ் தரப்பினா், சாந்தபுரத்தைச் சோ்ந்த பிரசாந்த் உள்ளிட்ட 6 பேரவை அரிவாளால் வெட்டினா்.

இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆகாஷ்(23), சாண்டி (எ) சந்தோஷ் (25) உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனா். இந்த வழக்கில் கைதான ஆகாஷ், சந்தோஷ் ஆகியோரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா்

பெ.தங்கதுரை பரிந்துரை செய்தாா். இந்த பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

Story image