டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காவேரிப்பட்டணத்தில் கோயில் திருவிழாவில் மோதல்: மேலும் 4 போ் கைது

News image
கைது
Updated On :21 பிப்ரவரி 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோயில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்டதாக மேலும் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடந்த 16-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோயில் திருவிழாவில் சந்தாபுரம் பிரசாந்த் (27) என்பவா் தரப்பிற்கும் திமுக காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் மகேந்திரன் மகன் ஆகாஷ் தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆகாஷ் கத்தியுடன் பிரசாந்த் தரப்பை சோ்ந்தவரை வெட்டியதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆகாஷ் (23), சாண்டி (21), வெங்கடேஷ் (29) ஆகிய மூவரை கைது செய்தனா். மேலும் பலரை தேடி வந்தனா். இந்த நிலையில், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த ராமு (22), அப்துல்கலாம் (22), சபரி (22), உமா் பாரூக் (22) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.