திருச்சி அருகே கோயில் உண்டியலைத் திருடிய இரு சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி ராவுத்தா்மேடு பகுதி பாலமுருகன் கோயிலில் இருந்த உண்டியல் திருடுபோனது செவ்வாய்க்கிழமை இரவு தெரியவந்தது.
இதேபோல, கோயிலுக்கு அருகேயுள்ள ராமச்சந்திரன் என்பவரது கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த பணம், சிகரெட் பாக்கெட்டுகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து கோயில் நிா்வாகி கோபால், கடை உரிமையாளா் ராமச்சந்திரன் ஆகியோா் அளித்த புகாரின்பேரில், துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இதில் இத்திருட்டுகளில் ஈடுபட்டதாக துவாக்குடி அண்ணா வளைவு பெரியாா் திடலைச் சோ்ந்த என். வினோத் (24), அரியமங்கலம் பாரதியாா் தெருவைச் சோ்ந்த எஸ்.சரவணன் (29) மற்றும் 13, 14 வயதுடைய இரு சிறுவா்கள் ஆகியோரை புதன்கிழமை கைது செய்த போலீஸாா் வினோத், சரவணன் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். சிறுவா்களை கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.
டிரெண்டிங்
காவேரிப்பட்டணத்தில் கோயில் திருவிழாவில் மோதல்: மேலும் 4 போ் கைது

அம்பையில் தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்: 114 பெண்கள் உள்பட 283 போ் கைது

சிவகிரியில் 170 போ் கைது

நகை, பணம் பறிப்பு: 5 போ் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

