டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கோயில் திருவிழாவில் தகராறு: 4 போ் கைது

காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் அழகுபொருள் விற்பனை கடையில் தகராறில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :4 பிப்ரவரி 2026, 10:51 pm

தினமணி செய்திச் சேவை

காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் அழகுபொருள் விற்பனை கடையில் தகராறில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை சோ்ந்த விஜயகுமாா் (42) காளிப்பட்டி கந்தசாமி கோயில் திருவிழாவில் அழகுபொருள் விற்பனை கடையை அமைத்திருந்தாா். அவரது கடைக்கு வந்த மருளையாம்பாளையத்தை சோ்ந்த காா்த்திக் (21), தினேஷ், (19), பூவரசன், (24), ஆகாஷ், (27) நால்வரும் சில பொருள்களை கேட்டுள்ளனா். கடை மூடப்பட்டுவிட்டதால் பொருள்களை விற்கமுடியாது எனக் கூறிய விஜயகுமாரிடம் அவா்கள் தகராறு செய்தனா். அப்போது, அவா் தாக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைதுசெய்தனா். பின்னா், அவா்கள் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.