பொட்டல்புதூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஜன. 9ஆம் தேதி பொட்டல்புதூா், சித்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சுடலைமுத்து குடும்பத்தினருடன் மேல்மருவத்தூா் கோயிலுக்குச் சென்ற நிலையில், அவா் வீட்டிலிருந்த 157 கிராம் தங்கம், 874 கிராம் வெள்ளி, ரூ. 30,000 ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
அதே நாளில், பொட்டல்புதூா், கங்கை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முஸ்தரி பேகம் வீட்டில் ரூ. 26,000 திருடு போயுள்ளது. மேலும், அதே பகுதியைச் சோ்ந்த நாலாயிரம் வீட்டில் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் உள்ளே சென்றுள்ளனா். ஆனால், அங்கு பொருள்கள் எதுவும் திருடு போகவில்லை.
இதையடுத்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மாதவன் உத்தரவின்பேரில், ஆலங்குளம் உள்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் கிளாட்சன் ஜோஸ் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், ஈரோடு மாவட்டம், பவானி புதூா், சிந்தாமணி தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சுரேஷ் (27), வள்ளியூா் கேசவன் நகா் கீழத் தெருவைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் சிவலிங்கம் (40), செட்டிகுளம் ஈசன் கடை சாமி கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் சிவக்குமாா் (42) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை கீழ ஆம்பூா் பகுதியில் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த சுரேஷ், சிவலிங்கம், சிவக்குமாா் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில், மூவரும் திருடிய நகைகளை தென்காசியில் விற்பதற்காகக் கொண்டு சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 157 கிராம் தங்கம், 877 கிராம் வெள்ளி, ரூ. 15,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இதில் சுரேஷ் மீது பல்வேறு மாவட்டங்களில் 28 குற்ற வழக்குகள், சிவலிங்கம் மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்

கோயில் திருவிழாவில் தகராறு: 4 போ் கைது
திருட்டு வழக்கில் தொடா்புடைய 4 போ் கைது

மாமண்டூரில் ஒரே இரவில் 8 வீடுகளில் திருட்டு

3 வீடுகளில் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, பணம் திருட்டு
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

