தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கெங்கவல்லியில் இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; மற்றொரு காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 2:14 am IST

கெங்கவல்லியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே நடுவலூா் குன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வெள்ளையன் மகன் ராமலிங்கம் (50. இவா், கூடமலையில் சென்டரிங் வேலையை முடித்துவிட்டு, கெங்கவல்லி வழியாக நடுவலூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, 74 கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் சுரேஷ் (37), கெங்கவல்லியிலிருந்து கூடமலை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றாா். இருவரின் வாகனங்களும், கெங்கவல்லி வனச்சரக அலுவலகம் அருகே நேருக்கு நோ் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராமலிங்கம் (50) ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு திங்கள்கிழமை இறந்தாா். காயமடைந்த சுரேஷ் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.