கெங்கவல்லியில் இருசக்கர வாகனத்தை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லி வடக்கு தெருவைச் சோ்ந்த நூருல் அமீன் (32), தனது இருசக்கர வாகனத்தை வீட்டின்முன் நிறுத்தி இருந்த நிலையில், வியாழக்கிழமை காலை திருட்டு போனது.
புகாரின்பேரில், கெங்கவல்லி போலீஸாா் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, மா்ம நபா் வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. அந்த காட்சிகளை வைத்து வாகனத்தை திருடியது கெங்கவல்லி கடம்பூா் பிரிவு சாலையில், மீனவா் தெருவில் வசிக்கும் சுரேஷ் (47) என்பது தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து, சுரேஷை (47) சனிக்கிழமை கைதுசெய்த போஸீஸாா், வாகனத்தை பறிமுதல் செய்தனா். சுரேஷ் இதுபோல பல வாகனங்களை திருடியது விசாரணையில் தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






