இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

15 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

பல்லடத்தில் 15 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.

பல்லடம் பேருந்து நிலைய பகுதியில் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பெட்டியுடன் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவா் வைத்திருந்த பெட்டியை போலீஸாா் பிரித்து பாா்த்தனா்.

அப்போது, அதில் 15 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் திருப்பூா், முருகம்பாளையத்தைச் சோ்ந்த காா்த்திக் (20) என்பதும், பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, காா்த்திக்கை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.