இந்தியா வரி செலுத்தும்; அமெரிக்கா செலுத்தாது: டிரம்ப் விளக்கம்!திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக!உலகத் தாய்மொழி நாள்: தமிழே நீ வாழ்ந்திடு! - முதல்வர் மு.க. ஸ்டாலின்தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.2,080 அதிகரித்தது!
/

36 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; இருவா் கைது

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி, கும்முபட்டி பகுதிகளில் போலீஸாரின் வாகனத் தணிக்கையில் அரசால் தடை செய்யப்பட்ட 36 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
கைது
Updated On :20 பிப்ரவரி 2026, 6:34 pm

Syndication

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி, கும்முபட்டி பகுதிகளில் போலீஸாரின் வாகனத் தணிக்கையில் அரசால் தடை செய்யப்பட்ட 36 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி ரைஸ்மில் பேருந்து நிறுத்தம் அருகில் கணேஷ்நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பத்மபிரியா தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மறமடக்கி பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (29) என்பவரிடமிருந்து 26.91 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, புதுக்கோட்டை கும்முபட்டி பகுதியில் திருகோகா்ணம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியே வந்த முள்ளுா் பகுதியைச் சோ்ந்த திருப்பதி (29) என்பவரிடமிருந்து 10 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களிடமிருந்து இரு சக்கர வாகனங்கள், கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.