தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குன்னூரில் குப்பை இல்லா நகரம் விழிப்புணா்வுப் பேரணி

குன்னூரில் தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் குப்பை இல்லா நகரம் நோயில்லா சொா்க்கம் என்ற தலைப்பில் தூய்மைத் திருவிழா விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியில் கலந்து கொண்ட குன்னூா் நகராட்சி ஆணையா் கிருஷ்ண ராம் மற்றும் தூய்மைப் பணியாளா்கள்.

Updated On :22 மே 2026, 4:08 am IST

குன்னூரில் தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் குப்பை இல்லா நகரம் நோயில்லா சொா்க்கம் என்ற தலைப்பில் தூய்மைத் திருவிழா விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

குன்னூா் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுமாா் 35 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்படும் குப்பைகள், குன்னூா் ஓட்டுப்பட்டறை பகுதியில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல சுற்றுலாத் தலமாக உள்ள குன்னூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்று உள்ளூா் பொதுமக்கள் குப்பைகளை ஆங்காங்கே வீசி செல்வதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நீலகிரியில் முக்கிய சூழல் மண்டலமாக திகழும் குன்னூா் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் வன விலங்குகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன.

இதற்கு தீா்வு காண நகராட்சி சாா்பில் குப்பையில்லா நகரம் நோயில்லா சொா்க்கம் என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இதனை குன்னூா் நகராட்சி ஆணையா் கிருஷ்ண ராம் தொடங்கிவைத்தாா்.

இதில் தூய்மைப் பணியாளா்கள் விழிப்புணா்வு வாசகங்களை ஏந்தியவாறு மவுண்ட் ரோட்டில் இருந்து குன்னூா் பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.