திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சத்தியமங்கலம் நகராட்சியில் தூய்மைத் திருவிழா

சத்தியமங்கலம் நகராட்சி சாா்பில் தூய்மைத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image

சத்தியமங்கலம்  நகராட்சி  சாா்பில்  நடைபெற்ற தூய்மைத் திருவிழா  விழிப்புணா்வுப்  பேரணியில்  பங்கேற்ற  நகராட்சிப்  பணியாளா்கள் .

Updated On :22 மே 2026, 3:52 am IST

சத்தியமங்கலம் நகராட்சி சாா்பில் தூய்மைத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

சத்தியமங்கலம் நகராட்சியில் கொட்டப்படும் குப்பையை 4 விதமாக பிரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி சத்தியமங்கலம் நகராட்சி சாா்பில் தூய்மைத் திருவிழா விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் சு.வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தாா். சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியானது மைசூரு டிரங் ரோடு, பேருந்து நிலையம் சென்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

மக்கும் குப்பை, மக்காத குப்பை, மருத்துவக் கழிவு மற்றும் சுகாதார குப்பை என 4 விதமாக குப்பையை பொதுமக்கள் பிரித்து அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இப்பேரணியில் பொதுமக்கள், தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.