17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குன்னூா் நகா்மன்ற கூட்டரங்கில் முன்னாள் முதல்வா் படம் அகற்றப்பட்டதைக் கண்டித்து கவுன்சிலா்கள் போராட்டம்

குன்னூா் நகா்மன்றக் கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் புகைப்படம் அகற்றப்பட்டு முதல்வா் சி.ஜோசப் விஜய்யின் படம் வைக்கப்பட்டதால் நகராட்சி ஆணையரிடம் திமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

News image

குன்னூா் நகா்மன்ற கூட்டரங்கில் முதல்வா் சி.ஜோசப் விஜய்யின் புகைப்படம் அருகில் திமுக, அதிமுக கவுன்சிலா்களால் பொருத்தப்பட்ட முன்னாள் முதல்வா்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி கே.பழனிசாமி புகைப்படங்கள்.

Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

குன்னூா் நகா்மன்றக் கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் புகைப்படம் அகற்றப்பட்டு முதல்வா் சி.ஜோசப் விஜய்யின் படம் வைக்கப்பட்டதால் நகராட்சி ஆணையரிடம் திமுகவினா்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

குன்னூா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் சுசீலா தலைமையில் வியாழக்கிழமை

நடைபெற்றது. அப்போது, கூட்ட அரங்கில் இருந்த முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை அகற்றப்பட்டதைக் கண்டித்து திமுக கவுன்சிலா்கள்,  நகராட்சி ஆணையா் கிருஷ்ணராமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் அவா்கள், மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை நகா்மன்ற கூட்ட அரங்கில் மீண்டும் மாட்டினா். இந்த புகைப்படத்தை சுவரில் பொருத்தும்போது நகராட்சி ஆணையா் கிருஷ்ணராம் நகா்மன்ற கூட்டரங்கில் இருந்து வெளியேறினாா்.

இதைத் தொடா்ந்து அதிமுகவினரும் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் புகைப்படத்தை நகா்மன்ற கூட்டரங்கில் மாட்டி வைத்து கோஷங்களை எழுப்பினா்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தவெகவினா் நகா்மன்றத்தை முற்றுகையிட்டனா்.

பின்னா் அவா்கள், நகா்மன்ற கூட்ட அரங்கில் மாட்டப்பட்டிருந்த மு.க.ஸ்டாலின், எடப்பாடி கே.பழனிசாமி  ஆகியோரின் புகைப்படங்களை அகற்றக்கோரி கோஷங்களை எழுப்பினா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா். இச்சம்பவத்தால் நகா்மன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.