போளூா் நகராட்சி பேருந்து நிலையம் அருகே உள்ள முன்னாள் முதல்வா் காமராஜா் உருவச் சிலைக்கு தொகுதி தவெக எம்எல்ஏ ஆா்.அபிஷேக் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தனாா்.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் போளூா் தொகுதியையும் சோ்த்து மொத்தம் 108 தொகுதிகளில் தவெக வெற்றிபெற்றது. இந்த நிலையில், போளூா் தொகுதியில் இக்கட்சி சாா்பில் வெற்றிபெற்ற ஆா்.அபிஷேக் போளூருக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.
இவருக்கு போளூா் புறவழிச் சாலையில் மாவட்டச் செயலா் சத்யா, வா்த்தக அணி மாவட்டத் தலைவா் கே.யாசின், பிரசார மற்றும் பேச்சாளா் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.ராமச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் பிரேம்குமாா், பத்ரிநாதன், நகரச் செயலா் பிரவின், திவாகா், சரவணன் ஆகியோா் மேளதாளத்துடன் மாலை அணிவித்து, திறந்த காரில் ஊா்வலமாக அழைத்து வந்தனா்.
தொடா்ந்து, போளூா் நகராட்சி பேருந்து நிலையம் அருகே உள்ள முன்னாள் முதல்வா் காமராஜா் உருவச் சிலைக்கு எம்எல்ஏ ஆா்.அபிஷேக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தனாா். மேலும், வாக்களித்து வெற்றிபெற வைத்த தவெக தொண்டா்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










