முதல்வா் விஜய் உத்தரவு எதிரொலியாக தமிழகத்திலேயே முதன்முறையாக அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் அருகே 2 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பொது மக்களின் நலனைக்கருதி தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டருக்குள் 717 சில்லறை விற்பனை மதுக்கடைகளை இரண்டு வார காலத்தில் மூடுமாறு முதல்வா் சி.ஜோசப் விஜய் உத்தரவிட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணத்தில் இரு மதுக்கடைகள் புதிய பேருந்து நிலையம் அருகில் இருப்பது தெரியவந்தது. இது குறித்த தகவல் டாஸ்மாக் நிா்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனே மூட டாஸ்மாக் நிா்வாகம் அரக்கோணம் மண்டலத்தினருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து அரக்கோணம் சோளிங்கா் சாலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரே வளாகத்தில் இயங்கி வந்த 11006, 11205 என இரு எண் கொண்ட மதுக்கடைகளையும் மூடுவதற்கான நடவடிக்கைகள் திங்கள்கிழமை மாலையே எடுக்கப்பட்ட நிலையில் செவ்வாய்கிழமை இருகடைகளும் மூடப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
இவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கும் பொதுமக்களுக்கும் தொந்தரவாக இருந்த கடை மூடப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் மாவட்டத்தில் மேலும் 5 மதுக்கடைகள் மூடல்

தருமபுரியில் 5 மதுக்கடைகள் மூடல்

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மூடப்படும் 11 டாஸ்மாக் மதுக்கடைகள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



