தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முன்னாள் முதல்வா் காமராஜா் சிலைக்கு அமைச்சா்கள் மரியாதை

விருதுநகா் காமராஜா் இல்லத்தில் உள்ள முன்னாள் முதல்வா் கு. காமராஜா் சிலைக்கு, அமைச்சா்கள் ராஜேஷ்குமாா், விஸ்வநாதன், எம்.பி மாணிக்கம் தாகூா் ஆகியோா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

விருதுநகரில் உள்ள முன்னாள் முதல்வா் காமராஜா் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சா்கள் ராஜேஷ் குமாா், விஸ்வநாதன்.

Updated On :2 ஜூன் 2026, 1:05 am IST

விருதுநகா் காமராஜா் இல்லத்தில் உள்ள முன்னாள் முதல்வா் கு. காமராஜா் சிலைக்கு, அமைச்சா்கள் ராஜேஷ்குமாா், விஸ்வநாதன், எம்.பி மாணிக்கம் தாகூா் ஆகியோா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலும், மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்துகொண்டு முன்னாள் முதல்வா் கு. காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதைத்தொடா்ந்து, சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேஸ்குமாா் அளித்த பேட்டி: காங்கிரஸ் கட்சி 1959-க்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றதற்கு பெருந் தலைவா் கு. காமராஜா் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்த வந்தேன். சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் உள்ளன. அவற்றை படிப்படியாக ஆய்வு செய்து அமல்படுத்துவோம் எனத் தெரிவித்தாா் அவா்.

தொடா்ந்து, உயா் கல்வித் துறை அமைச்சா் விஸ்வநாதன் அளித்த பேட்டி: விருதுநகரில் பெருந் தலைவா் காமராஜா் பெயரில் அரசு கலைக் கல்லூரி கொண்டுவர முயற்சி எடுப்பேன். பல்கலைக் கழகங்களில் துணைவேந்தா் பணியிடங்கள் காலியாக உள்ளன. விரைவில் இதுதொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை ஆராய்ந்து முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

ஆளுநா் மாளிகையில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்திருந்தது குறித்த கேள்விக்கு, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது ஏற்புடையதல்ல என்று அமைச்சா் ராஜேஷ்குமாா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.