தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழக முதல்வா் உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.

News image

பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 12:02 am IST

தமிழக முதல்வா் உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.

வழிபாட்டுத் தலங்கள், கவ்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து சுமாா் 500 மீ தொலைவுக்குள் அமைந்துள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

அதனடிப்படையில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 7 கடைகள் மூடப்பட உள்ளது. வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகில் 2 கடைகள், பழைய பேருந்து நிலையம் அருகில் 2 கடைகள், பள்ளிகொண்டாவில் ஒரு கடை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள 2 கடைகள் என மொத்தம் 7 கடைகள் 2 வாரத்திற்குள் மூடப்பட உள்ளது.

நாட்டறம்பள்ளியில் கடையை மூட கோரிக்கை:

நாட்டறம்பள்ளி பிராதன சாலையில் அரசினா் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகருகே உள்ளது. இப்பள்ளியில் நாட்டறம்பள்ளி, ஜெயந்திபுரம், சொரக்காயல்நத்தம், வெள்ளநாயக்கனேரி உட்பட சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில் அரசு பள்ளி அருகே இயங்கும் அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தினா். ஆயினும் இதுநாள் வரை கடை அகற்றப்படவில்லை.

இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள தமிழக முதல்வா் விஜய் வெளியிட்டுள்ள உத்தரவில் வழிப்பாட்டு தலங்கள், குடியிருப்புகள், கல்விநிறுவனங்கள் அருகே உள்ள 717 அரசு மதுபான கடைகள் இரு வாரங்களில் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது. நாட்டறம்பள்ளியில் இயங்கி வரும் அரசு மதுபான கடை பள்ளிக்கு 500 மீட்டருக்கு தொலைவில் இருந்தாலும் மது அருந்துபவா்களால் தொடா்ந்து தொல்லை அதிகரித்து வருவதால் கடையை மூட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.