தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து, அரியலூரில் 3 டாஸ்மாக் கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
தமிழகத்தில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டருக்குள் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி அரியலூா் பேருந்து நிலையம் மற்றும் பெரம்பலூா் சாலை ரயில்வே கேட் அருகிலுள்ள இரு டாஸ்மாக் கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன. மேலும், தா.பழூரிலுள்ள டாஸ்மாக் கடை வியாழக்கிழமை மூடப்படுகின்றன.
இதனால், கல்லங்குறிச்சி சாலையிலுள்ள இரு டாஸ்மாக் கடைகளில் நூற்றுக்கணக்கானோா் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










