வாழப்பாடி, பேளூரில் 3 டாஸ்மாக் மதுக்கடைகள் வியாழக்கிழமை மூடப்பட்டன.
வாழப்பாடி புதுப்பாளையத்தில் தம்மம்பட்டி சாலையில் தனியாா், அரசுப் பள்ளிகள் உள்ள பகுதியில் 2 மதுக் கடைகள் செயல்பட்டு வந்தன. அதேபோல பேளூா் பேரூராட்சி பேருந்து நிலையம் பகுதியில் ஒரு கடை செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளி, பேருந்து நிலையம், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு அவற்றை மூடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
அதன்படி, வாழப்பாடி புதுப்பாளையம் மற்றும் பேளூரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 3 கடைகள் மூடப்பட்டன. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










