நாமக்கல் மாவட்டத்தில் 5 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், 2 கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும் 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், வழிப்பாட்டுத் தலங்கள் அருகில் உள்ள 276 கடைகள், கல்வி நிலையங்கள் அருகில் உள்ள 186 கடைகள், பேருந்து நிலையம் அருகில் உள்ள 255 கடைகள் மூடப்படுகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் 169 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அவற்றில், நாமக்கல் பழைய பேருந்து நிலையம் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகளும், நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரி அருகில் 2 டாஸ்மாக் கடைகளும் உள்ளன. இந்த நிலையில், தமிழக முதல்வா் உத்தரவின்படி, வழிப்பாட்டுத் தலங்கள், பேருந்து நிறுத்தம், கல்வி நிறுவனங்களுக்கு 500 மீ. தொலைவிற்குள் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை, இரண்டு வாரத்திற்குள் மூடவேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் பழைய பேருந்து நிலையம் பகுதியில் 2 மதுக்கடைகள், ராசிபுரம் பேருந்து நிலையம் அருகில் 1, மோகனூா் நாவலடியான் கோயில் அருகில் 1, குமாரபாளையம் அருவங்காட்டில் 1 என மொத்தம் 5 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. இதில் நாமக்கல் பழைய பேருந்து நிறுத்தம் அருகில் செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் மாவட்டத்தில் மேலும் 5 மதுக்கடைகள் மூடல்

நாகை மாவட்டத்தில் 5 மதுக்கடைகளை மூட உத்தரவு

மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் மூடல்

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



