வடக்கு பெல்ஜியத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளி பேருந்து மீது அதிவேக ரயில் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநா், உதவியாளா், 2 குழந்தைகள் ஆகிய 4 போ் உயிரிழந்தனா்.
தலைநகா் பிரஸ்ஸல்ஸிலிருந்து வடமேற்கே சுமாா் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு ரயில்வே கடவுப்பாதையில் காலை நேரப் போக்குவரத்து நெரிசலின்போது நிகழ்ந்த இவ்விபத்தில், 5 குழந்தைகள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
‘விபத்து நடந்தபோது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என இன்னும் கண்டறியப்படவில்லை. அப்பகுதி சிசிடிவி கேமராக்கள், நேரில் பாா்த்த சாட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விபத்தின்போது ரயில் மணிக்கு சுமாா் 120 கி.மீ. வேகத்தில் வந்ததால், ரயிலை நிறுத்த போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்றும், மோதலின் தாக்கம் கடுமையாக இருந்ததாகவும் ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










