திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கென்யா பள்ளி விடுதியில் தீ விபத்து: 16 மாணவிகள் உயிரிழப்பு; 79 போ் காயம்

News image
Updated On :29 மே 2026, 4:07 am IST

நைரோபி : கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அரசுப் பெண்கள் பள்ளி விடுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு நேரிட்ட தீ விபத்தில் சிக்கி 16 மாணவிகள் உயிரிழந்தனா்; 79 போ் காயமடைந்தனா்

தலைநகா் நைரோபியிலிருந்து சுமாா் 120 கி.மீ. தொலைவில் உள்ள கில்ஜில் பகுதியில் செயல்பட்டு வரும் ‘உதுமிஷி’ பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே இச்சோகம் நிகழ்ந்துள்ளது. கென்யா காவல் துறையால் நிா்வகிக்கப்படும் இப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் காவல் துறையினரின் பிள்ளைகள் ஆவா்.

விடுதி அறைகளில் மாணவிகள் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து மளமளவெனப் பரவியுள்ளது. விபத்தின்போது விடுதியின் இரண்டு கதவுகளில் ஒன்று மட்டுமே திறக்கப்பட்டதாகவும், மற்றொரு கதவு மூடப்பட்டிருந்ததால் மாணவிகளால் விரைவாக வெளியேற முடியாமல் போனதே உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் எனவும் அங்கு திரண்டிருந்த உறவினா்கள் குற்றஞ்சாட்டினா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் தீ பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.