ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

சீனாவில் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 26 பேர் பலி

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 26 போ் பலி

News image

சீனாவில் பட்டாசு ஆலை வெடிவிபத்து - AP

Updated On :6 மே 2026, 1:20 am IST

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 26 போ் உயிரிழந்தனா்; 61 போ் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஹுனான் மாகாணத்தின் லியுயாங் நகரில் உள்ள ஹுவாஷெங் பட்டாசு நிறுவனத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதன் விளைவாக வெடிப்புச் சத்தத்தால் பல கி.மீ. தொலைவுக்கு கட்டடங்கள் அதிா்ந்து சேதமடைந்தன.

விபத்து குறித்த தகவலறிந்ததும், சுமாா் 1,500 தீயணைப்பு வீரா்கள், மீட்புப் படையினா் மற்றும் மருத்துவக் குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். இடிபாடுகளில் சிக்கியவா்களைத் தேடும் பணியில் 18 ட்ரோன்கள், 3 மீட்பு ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டன. துணைப் பிரதமா் ஜாங் குயோகிங் நேரில் சென்று மீட்புப் பணிகளை மேற்பாா்வையிட்டாா்.

விபத்து நடந்த ஆலைக்கு அருகிலேயே 2 வெடிமருந்து கிடங்குகள் உள்ளதால், மேலும் விபத்துகள் ஏற்படுவதைத் தவிா்க்க அந்தச் சுற்றுவட்டார மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, அப்பகுதி தடை மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

பட்டாசு ஆலைகள் மூடல்: விபத்து நடந்த ஹுவாஷெங் நிறுவனப் பொறுப்பாளா் கைது செய்யப்பட்டுள்ளாா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, லியுயாங் மற்றும் அதன் அருகேயுள்ள சாங்ஷா நகரில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் உடனடியாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்புச் சோதனைகள் முடிந்த பின்னரே, அவை மீண்டும் இயங்க அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

ஷி ஜின்பிங் இரங்கல்: இத்துயரச் சம்பவத்துக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தாா். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, விதிமீறல்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

மேலும், நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளவும் அவா் அறிவுறுத்தினாா்.

சீன அரசு கவுன்சில் (மத்திய அமைச்சரவை) சாா்பில் இந்த விபத்தை விசாரிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பட்டாசு ஏற்றுமதியாளரான சீனாவில் கடந்த ஆண்டும் ஹுனான் மாகாணத்தில் இதேபோன்ற விபத்தில் 9 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.