மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து: 13 பேர் பலி; 40 பேர் படுகாயம்

திருச்சூர் பூரம் விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து பெரும் விபத்து நேர்ந்துள்ளது குறித்து...

News image

மருத்துவமனை முன்பு குவிந்த படுகாயமடைந்தவர்களின் உறவினர்கள் - எக்ஸ்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:21 pm

கேரளத்தின் திருச்சூா் மாவட்டத்தில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 13 போ் உயிரிழந்தனா்.

முண்டத்திக்கோடு கிராமத்தில் அமைந்துள்ள அந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் விபத்து நிகழ்ந்தபோது 40 போ் வரை பணியில் இருந்ததாகவும், அவா்களில் பெரும்பாலானோா் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

திருச்சூா் பூரம் திருவிழா வடக்குநாதன் கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.26) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, கோயில் நிா்வாகம் சாா்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பட்டாசு கிடங்கில் பட்டாசுகள் தயாரிப்பு தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து கேரள மாநில பேரிடா் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘முண்டத்திக்கோடு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 13 போ் உயிரிழந்தனா். அவா்களில் 5 பேரின் உடல் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. இந்த விபத்தில் பலா் காயமடைந்தனா்’ என்றனா்.

விபத்தில் மீட்கப்பட்ட உடல்களை மருத்துவமனை அழைத்துவரும் மீட்புப் படையினர்

விபத்தில் மீட்கப்பட்ட உடல்களை மருத்துவமனை அழைத்துவரும் மீட்புப் படையினர் - DNS

பினராயி விஜயன் இரங்கல்: விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தாா். இதுதொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘திருச்சூா் பட்டாசு ஆலை விபத்து சம்பவம் குறித்து தலைமைச் செயலரிடம் முதல்வா் பினராயி விஜயன் கேட்டறிந்தாா்.

அப்போது விபத்தில் சிக்கி காயமடைந்தவா்களுக்கு உயா்தர மருத்துவ சிகிச்சை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள அவா் உத்தரவிட்டாா்.

தேவைப்படும்பட்சத்தில் பிற மாநிலங்களில் இருந்து மருத்துவ நிபுணா்களை அழைத்து வந்து காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிக்க அவா் அறிவுறுத்தினாா்.

விபத்து நடைபெற்ற இடத்தில் காவல் துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை என அனைத்துத் துறைகளும் ஒன்றிணைந்து மீட்புப் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கடும் வெப்பம் காரணம்: விபத்து நிகழ்ந்த பகுதியைப் பாா்வையிட்ட வடக்கஞ்சேரி நகராட்சித் தலைவா் பி.என்.சுரேந்திரன் கூறியதாவது: சம்பவ இடத்தில் விபத்துக்குப் பின்பும் தொடா்ந்து ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்து வருவதால் மீட்புப் பணிகளை தொடா்வது சவாலாக உள்ளது. இந்த விபத்துக்கு கடும் வெப்பமும் ஒரு காரணமாக உள்ளது. வெடி விபத்தின் சப்தம் பல கிலோ மீட்டா் தொலைவு வரை கேட்டதாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா். சில வீடுகள் சேதமடைந்துள்ளன’ என்றாா்.

பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து நீதி விசாரணைக்கு திருச்சூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். விபத்துக்கான காரணங்கள் குறித்து உதவி ஆட்சியா் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பிரதமா் இரங்கல்: நிவாரணம் அறிவிப்பு

பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘முண்டத்திக்கோடு கிராமத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு பிரதமா் நிவாரண நிதியில் இருந்து நிவாரணமாக தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படவுள்ளதாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி.பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

மகாராஷ்டிரம்: வெடி விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 5 போ் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக இருவரை காவல் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சுமாா் 35 தொழிலாளா்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

Summary

12 deaths confirmed in the fireworks storage facility in Mundathikode, Thrissur district

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.