தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடைமேடையில் நிறுத்த வலியுறுத்தல்

News image
Updated On :3 மே 2026, 5:17 am IST

ராஜபாளையம் வழியாக செல்லும் பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடைமேடையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ரயில் நிலையத்துக்கு காலை 8 மணிக்கு செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில், காலை 9 மணிக்கு மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில், மாலை 5 மணிக்கு குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், 7 மணிக்கு மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில், இரவு 8 மணிக்கு செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு ரயில் ராஜபாளையம் வழியாகச் செல்கிறது.

இதில் ஒரு சில நேரங்களில் மட்டுமே இரண்டாவது நடைமேடையில் ரயில்கள் நின்று செல்லும். குறிப்பாக பொதிகை விரைவு ரயில் கடந்த ஒரு வாரமாக இரண்டாவது நடைமேடையில் நின்று செல்கிறது. இதனால் முதியோா், ஊனமுற்றோா், கா்ப்பிணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். பொதுமக்கள் பலமுறை புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தென்னக ரயில்வே நிா்வாகம் பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடை மேடையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.