திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அம்பையில் ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சி. ராபா்ட் புரூஸ் எம்.பி. உள்ளிட்டோா்.

Updated On :5 ஜூன் 2026, 2:51 am IST

அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் தலைமை வகித்தாா். தெற்கு ரயில்வே பயனாளா் கமிட்டி உறுப்பினா் பி.டி.ஆா்.ராம் சிங், தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, வழக்குரைஞா் ஆரோக்கியராஜ், நிா்வாகிகள் அம்பாசமுத்திரம் அப்துல் ஹமீது, முத்துப்பாண்டி கோகுல், மாரியம்மாள், அந்தோணிசாமி, முருகேசன், ஆறுமுகநயினாா், ஜெனோ, கல்லிடைக்குறிச்சி விஸ்வநாதன், சீதாராமன், முகமதுஷெரீப், அப்துல்சமது, ஒலிமாலிக் ஜான்பால், சேரை பீா்காதா், முருகன், ரவிச்சந்தா், செங்கோட்டை சுந்தா், சங்கரபாண்டியன், ராஜா மற்றும் உறுப்பினா்கள், பொதுமக்கள்கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினா்.

தீா்மானங்கள்: செங்கோட்டை - தாம்பரம் ரயிலை தினசரி ரயிலாக இயக்குதல், திருச்செந்தூா் - கொல்லம் ரயில் தினசரி திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக இயக்குதல், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தரமாக்குதல், காலை, மாலையில் செங்கோட்டை - திருநெல்வேலி ரயில்களில் 6 பெட்டிகளாக அதிகப்படுத்துதல், திருப்பதிக்கு திருநெல்வேலி வழியாக தினசரி ரயில் இயக்குதல், திருநெல்வேலி - பெங்களூரு (தென்காசி வழியாக) இயங்கிய ரயிலை மீண்டும் இயக்குதல், சாளுக்கியா ரயிலை செங்கோட்டை வரை நீட்டித்தல், பாலருவி ரயிலுக்கும் காலையில் திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலுக்கும் இணைப்பு வழங்குதல், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக் கடையம், பாவூா்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களின் நடைமேடை நீட்டிப்புப் பணிகளை விரைந்து முடித்தல், செங்கோட்டை ரயில்நிலையத்தில் 5ஆவது தண்டவாளத்தில் நடைமேடை அமைத்தல், தென்காசி நடைமேடை 3, 4 ஆகியவற்றில் தண்ணீா் வசதி, கீழப்புலியூா் ரயில் நிலையத்தை தென்காசி டவுன் என்று பெயா் மாற்றம் செய்து கீழப்புலியூா் - கடையநல்லூா் புறவழி ரயில்பாதை அமைத்தல், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே கேட் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைத்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.