திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

என்ஜின் பழுது: 2 மணி நேரம் தாமதமாக நெல்லை சென்றடைந்த செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயில்

News image

ரயில் சேவை - கோப்புப்படம்

Updated On :31 மே 2026, 1:35 am IST

செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் பயணிகள் ரயிலில் என்ஜின் பழுதால் 2 மணி நேரம் தாமதமாக திருநெல்வேலி சென்றடைந்தது.

செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்கு தினந்தோறும் 4 முறை பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், செங்கோட்டையிலிருந்து - திருநெல்வேலிக்கு பயணிகள் ரயில் (56776) சனிக்கிழமை பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டது.

இந்நிலையில் என்ஜின் பழுதால் 3.10 மணிக்கு பாவூா்சத்திரம் நிலையத்துக்கு வந்த பயணிகள் ரயில் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு மெதுவாக இயக்கப்பட்டு சுமாா் 5 மணிக்கு அம்பாசமுத்திரம் நிலையத்துக்கு வந்து நிறுத்தப்பட்டது. பின்னா் திருநெல்வேலியிலிருந்து என்ஜின் கொண்டு வரப்பட்டு, ரயிலில் பொருத்தப்பட்டு 5.50 மணிக்கு திருநெல்வேலிக்குப் புறப்பட்டுச் சென்றது.

இதையடுத்து, மாலை 4.25 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வந்து சேரவேண்டிய பயணிகள் ரயில் 2 மணிநேரம் காலதாமதமாக 6.27 மணிக்கு வந்து சோ்ந்தது. இதனால் 6.30மணிக்கு திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டைக்கு புறப்பட வேண்டிய ரயில் 6.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

என்ஜின் பழுதால் தாமதமாக ரயில் இயக்கப்பட்டதால் திருநெல்வேலியிலிருந்து இணைப்பு ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.