/

ஆறோடும் நீரோடும்: சசி எழில்மணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

மாதம் மூன்று
பெய்த மழை
பொய்யாகிப் போனது
மண்ணில் வாழும்
உயிர் எல்லாம்
நீரின்றி வாடுது

ஆறோடும் வழியெல்லாம்
அடைபட்டுப் போனது
நீரோடும் தடம்கூட
தெரியாமல் போனது

விதைகூட துளிர்க்காமல்
மண்ணாய் மக்கிப் போனது
சோலையாய் இருந்த இடம்
பாலையாய் மாறுது

நலம் செய்த இயற்கையை
யார் இங்கு அழித்தது
நாம்தானே காரணம்
மனம் ஏற்க மறுக்குது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.