ஆறோடும் நீரோடும்: கா. மகேந்திரபிரபு


மண்ணில் தாவி குதித்தோடும்
மங்கையென வெட்கம் கொண்டே
மயங்கி ஓடிவரும் ஆறே !
இருக்க நிலையில்லா நீரிது
நிலத்தில் ஓரிடம் நில்லாது
காடு மேடு அலையும் ஆறே !
நீ சொல்லித்தரும் பாடம்
நில்லாத தொடர் ஓட்டமதுவே !
இயங்கிக்கொண்டே இருக்கும் ஆறே !
கடலில் கலக்காது அணையில் தேங்கி
மக்களுக்கு உணவாகிறாய் - நன்றிகள் !
மழை உன் தாய் என்றால்
சுற்றுப்புற மாசுபாடுகள் -
மனித செயல்பாடுகள் காயங்களாய் !
நீரின் பாதையில் கட்டிடங்கள் !
அதனாலே வெள்ளமாகிறாய்!
உன் தாயின் வருகைக்குக் காத்திருக்கும்
கோடி உள்ளங்கள்- அழைத்து வா ஆறே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...