/

நிழல் தேடி: வேலூர் மூ.மோகன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

பெற்ற மனம் பூரிக்க
பத்து பொருத்தமுடன் 
பந்தலை வலம் வந்த காலம்
பகற் கனவாய் போய்விட - 
'கை-பேசி' துணையோடு வெறும்
கண் பேசும் வார்த்தையில்
காதலெனும் கானல் நீரில்
நிஜங்களைத் தொலைத்து...
நிழல்களைத் தொடர்கிறோம்!

நெஞ்சம் நிறைந்த ஆசியோடு
அட்சதை தூவி மகிழ்ந்தது
அத்தனையும் மறந்துபோய்...
வெறும் கடமைக்கு 'வரவேற்பில்'
'வாழ்த்து-உறை' கொடுத்து
விடுப்பு இல்லையெனச் சொல்லி
விருந்துக்கு முந்துவதில்
'கின்னஸ்' சாதனை படைக்கும்
 'கில்லாடி'களாய் ஆனோம்!

வீட்டுக்கு புது வரவு வந்ததும்
விழுதுகளோடு விளையாடி
விக்கிரமதித்தன் கதை பேசிய
வம்ச விருட்சங்களையெல்லாம்
வேரோடு பெயர்த்தெடுத்து
வெந்நீரால் வளர்க்கின்றோம்
முதியோர் இல்லத்தில்!

வேரோடு விழுதுக்கிருந்த பந்தம்
வெறும் கனவாய்ப் போய்விட -
யாரோடு உறவாடும் நம் 
எதிர்கால சொந்தம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.