/

 நிழல் தேடி: சீர்காழி .ஆர் .சீதாராமன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

சுட்டெரிக்கும் வெயிலில்
விளையாடிய சிறுவர்கள்
இளைப்பாற  நிழல் தேடி
நகர்ந்தனர் "

வயது முதிர்ந்த   
பெற்றோர்கள் பிள்ளைகளின்
நிழல்தேடி தஞ்சம்
புகுந்தனர்

வெளிநாட்டுப் பறவை
முதல் நெடுந்தூர
பயணம் வந்த பறவைகள்
வரை நிழல் தேடி      
புகுந்தது மரக்கிளையில்

வறண்ட பூமியில்
கண்ணீரோடு தாகம் தீர
விவசாயி நிழலை தேடி
முன்னேறினான்

நட்சத்திர குழந்தைகள் 
தாய் நிலாவின் நிழல்தேடி
சுற்றி நின்று வட்டம்
அடித்தது தானும்
ஜொலித்து விட 

தாரம் தாய் என்று
பெண்களின் உழைப்பு
சேவை தேவை
நிழல் தேடி ஆண்கள்
கூட்டம்

பயணிகளும் வீட்டு
விலங்குகளும் சாலை
ஓரத்தில் நிழல் தேடி
ஓய்வுக்காக பயணம்
  
அசையும் உயிர்கள்
எல்லாம் நிழலைத்
தேடியே பயணம்
செய்வது மட்டும்
நிதர்சன உண்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.