இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கைகோர்ப்போம்: பெருமழை விஜய்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

காதலுக்காய்க் கை கோர்க்கும் கன்னியரே!காளையரே!கன்னித்   தமிழ்நாட்டில்   கண்ணியமாய்   நாம் வாழ..அந்நியராய் ஆகிவிட்ட அரசியல்வாதிகளைத் துரத்த...அதிகார போதை கொண்ட அதிகாரிகளைத் திருத்த...மக்கள் நலன் மறந்து வாழும் மந்திரிகளை நல்வழி நடத்த...'எல்லோருக்கும் எல்லாமும்!...எல்லாமும் எல்லோருக்கும்!'என்றநிலை   தமிழ்நாட்டில்   ஏகமாய்த்    தலையெடுக்க...உழுபவர்கள்    அனைவரும்   உற்சாகம்    மிகவடையஉழைக்கும் வர்க்கம் அனைவருக்கும் உறுதியாய்ப் பணிகிடைக்க...படித்தவர்கள் அனைவருமே உரித்தான பணியில் தானமர...கடித்துக்  குதறும்   தெரு நாய்களைக்  கட்டுப்படுத்த...கல்வி   என்ற பெயரால்   கடின வியாபாரம்   செய்யும்உளுத்துப்போன வீணர்களை ஊரை விட்டே விரட்ட...படித்துப் படித்துச் சொல்லியும் டாஸ்மாக்கை மூடாத கூவத்தூர்     கனவான்களை    கூடு விட்டு     எழுப்ப...நமது   வரிப் பணத்தில்   நயமான   சம்பளம்    பெற்று யாருக்கோ பாதுகாப்பளிக்கும் காக்கிகளைத் திருத்த...காசுக்காய் நீதி விற்கும் கனம் கோர்ட்டுகளை மாற்ற...​ஊராரை    மிரட்டி   ஒன்றாய்ச்   சொத்து   சேர்த்தஈனர்களை   விரட்டி   இம்மண்ணைப்  புனிதமாக்க...ஒன்றாய்ச் சேர வேண்டும்!கோர்த்த கைகள் உறுதி பெற வேண்டும்!நன்றாய் இவ்வுலகை நாம் சமைப்போம்! என்று சொல்லிகன்றும்    மாடும் போல்   கனியன்பை   மிக க்   கொண்டுஒன்றாய் இணைந்திடுவோம்!உறுதியாய்க் கை பற்றிடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.