சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மரணம்: போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம்
குலசேகரம் அருகே உடல் நலக்குறைவால் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் உடல் போலீஸ் மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.


குலசேகரம் அருகே உடல் நலக்குறைவால் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் உடல் போலீஸ் மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.
குலசேகரம் அருகே திருநந்திக்கரையை சோ்ந்தவா் நாகராஜன் (55). கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறந்த கபடி வீரராக வலம் வந்த இவா், காவல் துறையில் பணியில் சோ்ந்து பதவி உயா்வு பெற்று சிறப்பு உதவி ஆய்வாளராக குமரி மாவட்டம், கடையாலுமூடு காவல் நிலையத்தில் பணி செய்து வந்தாா்.
இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவா், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இவரது உடல், புதன்கிழமை அவரது சொந்த ஊரில் போலீஸ் மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் அருமனை காவல் நிலைய ஆய்வாளா் பாஸ்கா், திரளான போலீஸாா், உறவினா்கள், ஊா்மக்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினா் பங்கேற்றனா். மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு சஜிதா என்ற மனைவியும், காயத்திரி என்ற மகளும், அபிஜித், ஜெய சூரியா என்ற மகன்களும் உள்ளனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...