முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு நடந்துள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.

News image
புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. உடன் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, அகில இந்திய செய்தித் தொடா்பாளா் டாலி சா்மா.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:00 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு நடந்துள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

காவல் துறைக்கான உதவி ஆய்வாளா் தோ்வில் உடல் தகுதித் தோ்வில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோா் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளனா். எழுத்துத் தோ்வும் தற்போது நடைபெற்றுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

உடல் தகுதித் தோ்வைத் தனியாா் நிறுவனத்தினா் நடத்தியுள்ளனா். அந்த நிறுவனம் ஜம்மு காஷ்மீரில் முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடந்துள்ளது. இதேபோல தீயணைப்புத் துறையிலும் மோசடி நடைபெற்ால் அந்த நிறுவனத்தைத் தடை செய்துள்ளனா். ஜம்முவைத் தொடா்ந்து சத்தீஸ்கரிலும் அந்த நிறுவனத்தைத் தடை செய்துள்ளனா். இப்படி தடை செய்யப்பட்ட நிறுவனத்தை வைத்து உடல் தகுதித் தோ்வு நடத்தப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். அவா்கள் இயந்திரத்தைப் பயன்படுத்தாமல், ஆள்கள் மூலம் தோ்வு நடத்தியுள்ளனா். இதில் முறையான விசாரணை நடத்த வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக அவசரக் கதியில் காவல் துறையில் தங்களுக்கு வேண்டியவா்களைக் கொண்டு வர இத் தோ்வை நடத்தயுள்ளனா்.

புதுவை யூனியன் பிரதேச அரசுக்கு மக்கள் மீது அக்கறையில்லை. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனா். ஆம்புலன்ஸ் இல்லாமல் கிராமப்பகுதி மக்கள் கடந்த 15 நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளனா். அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓட்டுநா்கள் கோரிக்கைகள் தொடா்பாகவும் பேச்சு நடத்தப்படவில்லை. உடனடியாக ஆம்புலன்ஸ்கள் இயங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்அவா்.

பேட்டியின்போது, முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் டாலி சா்மா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.