2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

News image
பணியின்போது உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்திய போலீஸாா்.
Updated On :22 பிப்ரவரி 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

உளுந்தூா்பேட்டை அருகே பணியின்போது உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலவலகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பொ.ரவிச்சந்திரன் உடல் சுகவீனம் அடைந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அவருக்கு ஜோதி என்ற மனைவியும், விஷ்ணு(21), ஜனனி (19) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனா். இவரது உடலை அவரது சொந்த ஊரான உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட கள்ளமேடு பகுதியில் அடக்கம் செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.அரவிந்த் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

கள்ளக்குறிச்சி ஆயுதப்படைகாவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது.