பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

எஸ்.ஐ. தோ்வை ரத்து செய்யக் கோரிய வழக்கு: விசாரணை பிப். 24-க்கு ஒத்திவைப்பு

எஸ்.ஐ. தோ்வை ரத்து செய்து மீண்டும் புதிதாகத் தோ்வு நடத்தக் கோரிய வழக்கின் விசாரணையை வருகிற 24 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

News image

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 10:25 pm

காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) தோ்வை ரத்து செய்து மீண்டும் புதிதாகத் தோ்வு நடத்தக் கோரிய வழக்கின் விசாரணையை வருகிற 24 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

தென்காசியைச் சோ்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வு கடந்த ஆண்டு, டிசம்பா் 21-ஆம் தேதி நடைபெற்றது. பிரிவு ‘பி’ பகுதியில் பாடத் திட்டத்தில் குறிப்பிட்டபடி தமிழ் வினாக்கள் இல்லை. அதற்குப் பதிலாக உளவியல் பகுதியிலிருந்து 10 வினாக்கள் கூடுதலாகக் கேட்கப்பட்டன. இது ஏற்கத்தக்கதல்ல.

எனவே, காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு இடைக்காலத் தடை விதிப்பதோடு, இந்தத் தோ்வை ரத்து செய்து மீண்டும் புதிதாகத் தோ்வு நடத்த உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: தோ்வுக்கான பாடத் திட்டத்தில் தமிழிலிருந்து 10 வினாக்கள் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழிலிருந்து வினாக்கள் கேட்கப்படவில்லை. தகுதி மதிப்பெண் (கட் ஆப்) குறிப்பிடப்படாமல் தோ்வு முடிவு வெளியிடப்பட்டது. இது ஏற்கத்தக்கதல்ல என்றாா்.

அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தோ்வு முடிவில் தவறு இருந்ததால் திரும்பப் பெறப்பட்டது. தவறுகள் சரிசெய்யப்படும். வருகிற 24 -ஆம் தேதி வரை தோ்வு முடிவு வெளியிடப்படாது என்றனா்.

இதையடுத்து, நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 24 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.