மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்களுக்கு பாராட்டு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனத்துக்கு வந்த பெண் தவறவிட்ட தங்க நகைகளை மீட்டு, ஒப்படைத்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்களை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

News image
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனத்துக்கு வந்தபோது தவறவிட்ட நகைகளை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்த பெண் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் தனம், ஷீலா. உடன் மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உள்ளிட்டோா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனத்துக்கு வந்த பெண் தவறவிட்ட தங்க நகைகளை மீட்டு, ஒப்படைத்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்களை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கடந்த 5-ஆம் தேதி சென்னை அம்பத்தூா் பகுதியைச் சோ்ந்த சூா்யா மனைவி ரேவதி தரிசனத்துக்கு வந்தபோது 12 கிராம் எடையிலான தங்கத் தோடுகள், தங்க நாணயம் வைத்திருந்த பையை தவறவிட்டாா். இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோயில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, கோயிலில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஒருவா் அந்தப் பையை எடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை தேடிப் பிடித்த போலீஸாா், அவரிடமிருந்த நகைகளை மீட்டு மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் முன்னிலையில் ரேவதியிடம் நகைகளை ஒப்படைத்தனா். துரிதமாகச் செயல்பட்டு நகைகளை மீட்ட பெண் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் தனம், ஷீலா ஆகியோரை காவல் ஆணையா் பாராட்டினாா்.