இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கைகோர்போம்:  ஆ.மகராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

உளியின் வலி தாங்க
உடன்பட மறுக்கும்
கரும்பாறை சிலையாக முடியாது..

அடித்துத் துவைக்கவும்,
கசக்கிப் பிழியவும்
மறுப்புத் தெரிவுக்கும்
அழுக்காடையைச்
சலவை செய்ய இயலாது..

பிரசவ வலியைத்
தவிர்க்க நினைக்கும் பெண்களால்,
தாய்மையைச் சுவைக்க முடியாது..

வரலாற்றின் பக்கங்களில்
பதிவேற்றப் பட்ட 
சீர்திருத்தங்களெல்லாம்,
சிலரின் தியாகங்களையும்

பலரின் வலிகளையும்
சுமந்தே கடந்து வந்திருக்கின்றன..

முன்னோர் நட்டு வளர்த்த
மரங்களின் கனிகளைச் சுவைக்கும்
உரிமை பெற்ற நமக்கு,
வருங்காலச் சந்ததிகள் 
கனிகள் பெற மரங்கள் வளர்க்கும் 
கடமையும் இருக்கிறது..

வாருங்கள்..கைகோர்போம்..!

சேர்ந்தே வலி தாங்கி,
வலிமையான பாரதம் படைத்து,
வருங்கால சந்ததிகளுக்கு வழங்குவோம்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.