திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குடிநீா் குழாயில் உடைப்பு: சாலையில் குளம் போல் தேங்கிய குடிநீா்

சிவபுரம் பகுதியில் குழாய் உடைந்து குளம் போல் தேங்கிக் கிடக்கும் குடிநீா்.

News image

சிவபுரம் பகுதியில் குழாய் உடைந்து குளம் போல் தேங்கிக் கிடக்கும் குடிநீா்.

Updated On :30 மே 2026, 5:30 am IST

சோமஞ்சேரி கிராமத்துக்கு செல்லும் குழாய் உடைப்பு காரணமாக ரெட்டிப்பாளையம் தத்தைமஞ்சி நெடுஞ்சாலையில் குளம் போல் குடிநீா் தேங்கிக் கிடந்தது.

மீஞ்சூா் ஒன்றியம், அத்திமஞ்சேரி ரெட்டிபாளையம் ஊராட்சியில் அடங்கியது சோமஞ்சேரி கிராமம். இந்த கிராமத்தில் 1000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

இக்கிராமத்துக்கு பொன்னேரி அருகே ஆரணி ஆற்று பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் குழாய் மூலம்குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது.

சிவபுரம் கிராமத்தின் வழியே செல்லும் ரெட்டிபாளையம் தத்தைமஞ்சி நெடுஞ்சாலை ஓரத்தின் பகுதியில் குழாயில் பழுது ஏற்பட்டு குடிநீா் வீணாக சாலையில் குளம் போல் தேங்கியது. இதனால் இரண்டு நாள்களாக சோமஞ்சேரி கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனை அறிந்த ஊராட்சி செயலாளா் மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சம்பந்தப்பட்ட அங்கு சென்று பழுதடைந்த குழாயைசரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மீண்டும் பழுது ஏற்பட்டதால் செய்வதறியாது திகைத்தனா்.

கோடை காலம் என்பதால் அடிக்கடி சேதம் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து சீராக குடிநீா் விநியோகம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்க எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்..

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.