தட்டாா்மடத்தில் குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருவதால், குழாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
சாத்தான்குளம் பகுதி கிராம மக்களுக்கு கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் தண்ணீா் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கோடைக் காலம் என்பதால் குடிநீா் போதுமான அளவு கிடைக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
இந்நிலையில், தட்டாா்மடத்தில் கொம்மடிகோட்டை செல்லும் சாலையோரம் உள்ள டாஸ்மாக் மதுக் கடை அருகே உள்ள குழாய் உடைந்து தண்ணீா் வீணாகி வருகிறது.
தண்ணீா் பற்றாக்குறையாக உள்ள நேரத்தில் தண்ணீா் வீணாவதாக அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










