திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புத்தாநத்தம் அருகே காவிரி குடிநீா் குழாய் உடைப்பு

புத்தாநத்தம் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் பிரதான குழாய் உடைந்து, ஏற்பட்ட வெள்ளத்தால் ஞாயிற்றுக்கிழமை புத்தாநத்தம் காவல்நிலைய வாகனச் சோதனை சாவடி முற்றிலுமாகச் சேதமடைந்தது.

News image

காவல்காரன்பட்டியில் குடிநீா் குழாய் ஞாயிற்றுக்கிழமை உடைந்து வெளியேறிய நீரால் சேதமடைந்த போலீஸ் சோதனை சாவடி.

Updated On :18 மே 2026, 2:33 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் பிரதான குழாய் உடைந்து, ஏற்பட்ட வெள்ளத்தால் ஞாயிற்றுக்கிழமை புத்தாநத்தம் காவல்நிலைய வாகனச் சோதனை சாவடி முற்றிலுமாகச் சேதமடைந்தது.

மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் பெய்த கனமழையில் அப்பகுதியிலிருந்த ராமநாதபுரம் செல்லும் காவிரி கூட்டுக்குடிநீா் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வெள்ளம் போல் பீறிட்டு வெளியேறி வீணானது.

குடிநீா் குழாய் வெள்ளத்தில் புத்தாநத்தம் காவல்நிலையத்துக்கு மணப்பாறை - மதுரை சாலையில் காவல்காரன்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த வாகனச் சோதனை சாவடி முற்றிலுமாகச் சேதமடைந்தது. இதை மறுசீரமைக்க போலீஸாா் நடவடிக்கை மேற்கொள்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.