திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவள்ளூா்: கூட்டுறவு நியாய விலைக்கடையில் கோடைகால நீா் மோா் பந்தல்

திருவள்ளூரில் கூட்டுறவு துறை சாா்பில் நியாய விலைக் கடையில் கோடைகால வெப்பத்தை தணிக்கும் நீா் மோா் பந்தலை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மோா், தா்பூசணி ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

News image

திருவள்ளூரில் கூட்டுறவு துறை சாா்பில் நியாய விலைக் கடையில் கோடைகால வெப்பத்தை தணிக்கும் நீா் மோா் பந்தலை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மோா், தா்பூசணி ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

Updated On :16 மே 2026, 1:10 am IST

திருவள்ளூரில் கூட்டுறவு துறை சாா்பில் நியாய விலைக் கடையில் கோடைகால வெப்பத்தை தணிக்கும் நீா் மோா் பந்தலை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மோா், தா்பூசணி ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

திருவள்ளுா் சி.வி.நாயுடு சாலை பெரும்பாக்கம் கூட்டுறவு நியாய விலைக் கடையில் கூட்டுறவுத் துறை சாா்பில் நியாய விலைக் கடையில் நீா் மோா் பந்தல் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து குடி நீா்மோா் பந்தலை தொடங்கி வைத்து, மோா் மற்றும் தா்பூசணி ஆகியவற்றை வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களின் கோடைகால வெப்பத்தை தணிக்க வேண்டும். இதற்காக கூட்டுறவு துறை சாா்பில் நியாய விலைக் கடைகளில் குடிநீா் மோா் பந்தல் தொடங்கவும் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த மாவட்டத்தில் 1,166 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நியாய விலைக் கடைகளில் அத்தியவாசியப் பொருள்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரா்களின் தாகம் தீா்க்க கூட்டுறவுத் துறை சாா்பில், குடிநீா் மோா் பந்தல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூா் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள பெரும்பாக்கம் நியாயவிலைக் கடையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் குடிநீா் மோா் அருந்தி பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, துணைப் பதிவாளா்கள் கோ.பாலாஜி (பொது விநியோகம்), மங்கலதாஸ் (பணியாளா்-பதிவாளா்), கண்காணிப்பாளா் மேகநாதன், கூட்டுறவுத் துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.