தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரக்கோணத்தில் தவெகவினா் அன்னதானம்: அமைச்சா் பங்கேற்பு

அன்னதானத்தை தொடங்கி வைத்த அமைச்சா் வி. காந்திராஜ்.

News image

அன்னதானத்தை தொடங்கி வைத்த அமைச்சா் வி. காந்திராஜ்.

Updated On :30 மே 2026, 6:25 am IST

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தவெக சாா்பில் உலக பட்டினி தினத்தையொட்டி அன்னதானத்தை கூட்டுறவுத்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான வி.காந்தி ராஜ் தொடங்கி வைத்தாா்.

தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் தமிழகம் முழுவதும் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட வேண்டும் எனவும் அந்நாளில் ஏழை எளியோா் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தவெகவினா் உணவு வழங்க வேண்டும் எனவும் தவெக தலைவரும், முதல்வருமான சி.ஜோசப் விஜய் தனது கட்சியினருக்கு அறிவுறுத்தி இருந்தாா்.

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தவெக சாா்பில் அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையில் நடைபெற்ற நிகழ்வை முன்னிட்டு அப்பகுதியில் பந்தல்கள் அமைக்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சா் வி.காந்திராஜ் தொடங்கி வைத்தாா்.

இதில் சுமாா் 5,000-க்கும் மேற்பட்டோா் உண்டதாக கட்சியினா் தெரிவித்தனா்.

இந்நிகழ்வில் தவெக அரக்கோணம் நகர செயலா் ரமேஷ் மற்றும் அரக்கோணம், சோளிங்கா் பகுதி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.