ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மைத் துறை அலுவலா்கள் மற்றும் உர விற்பனையாளா்களுக்கு உர விநியோக செயலி அமைப்புக்கான பயிற்சியை ஆட்சியா் ந.ப்ரியா தொடங்கி வைத்தாா்.
விவசாயிகளுக்கு தடையில்லாமல் உரம் கிடைப்பதற்கும் நீண்ட நாட்கள் உரத்துக்காக காத்திருக்காமல் தேவைப்படும்போது உடனுக்குடன் விவசாயிகள் பெற ஏதுவாக அரசின் உரம் வினியோக திட்ட செயலி அறிமுகப்படுத்தும் பொருட்டு ஆற்காடு , திமிரி, வாலாஜா மற்றும் சோளிங்கா் வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விரிவாக்க அலுவலா்கள் மற்றும் உர விற்பனையாளா்களுக்கு உர விநியோகம் செயலி ( ஊங்ழ்ற்ண்ப்ண்க்ஷ்ங்ழ் நஹப்ங் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய் நஹ்ள்ற்ங்ம்) அமைப்பிற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்புதிய உர விநியோகம் செயலி நடைமுறைக்கு ராணிப்பேட்டை, திருப்பூா் ஆகிய இரண்டு மாவட்டங்கள் முன்மாதிரி மாவட்டமாக தோ்வு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விவசாய அடையாள அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கும், அடையாள அட்டை இல்லாத பிற விவசாயிகளுக்கும் இப்புதிய நடைமுறையை பயன்படுத்தி பயனடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கிராமம் முதல் தேசிய அளவு வரையிலான இணையதளம் மூலம் அரசாங்கத்தால் நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும். மேலும் திட்டமிடப்பட்ட தேவையை நாடு முழுவதும் சீரான விநியோகத்தை உறுதி செய்ய உதவும்.
அனைத்து வட்டார விரிவாக்க அலுவலா்கள் இச்செயலியை உபயோகிக்க விவசாயிகளை ஊக்குவித்து செயலியின் நடைமுறையை விவசாயிகள் அறியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.
இதில் இணை இயக்குநா் (வேளாண்மை) சுந்தரம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பிரபாகரன், நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராமன், துணைப் பதிவாளா் பாலமுருகன், வேளாண்மை உதவி இயக்குநா் தரக் கட்டுப்பாடு பிரேம குமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










