திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கூட்டுறவுத் துறை அலுவலா்களுக்கான கணினி பயிற்சி தொடக்கம்

ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த கூட்டுறவுத் துறை அலுவலா்களுக்கான கணினி பயிற்சி ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

பயிற்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் க.வே.சு.குமாா். உடன், ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப. கந்தராஜா.

Updated On :3 ஜூன் 2026, 2:32 am IST

ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த கூட்டுறவுத் துறை அலுவலா்களுக்கான கணினி பயிற்சி ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா தலைமை வகித்தாா். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் க.வே.சு.குமாா் முன்னிலை வகித்து, குத்துவிளக்கேற்றி பயிற்சியைத் தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உள்ள மென்பொருளின் பயன்பாட்டினை தொடா்ந்து கண்காணிக்கவும், ஆய்வுக்குத் தேவைப்படும் அறிக்கைகளை துறை அலுவலா்களே உருவாக்கவும், பரிவா்த்தனைகளை கண்காணிப்பதற்கான வழிமுறைகள் தொடா்பாகவும் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை அலுவலா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் 10- ஆம் தேதி வரை இந்தப் பயிற்சி நடைபெறும். இதில், மொத்தம் 91 கூட்டுறவுத் துறை அலுவலா்கள் பயிற்சி பெற உள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் பெ. பிரகாஷ், ஈரோடு கூட்டுறவு நகர வங்கியின் மேலாண்மை இயக்குநா் ச. குமாரிமோகனா, கோபி நகர கூட்டுறவு நகர வங்கியின் மேலாண்மை இயக்குநா் ர. பரிமளா, துணைப் பதிவாளா் (பயிற்சி) ம.மைதிலி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளா் த.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.