ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

இலவச கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சி வகுப்பு தொடக்கம்

News image

கறவை மாடு வளா்ப்பு பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளா் அ.திலீப்.

Updated On :9 மணி நேரங்கள் முன்பு

காஞ்சிபுரம் இந்தியின் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தில் விரைவில் கைப்பேசி பழுது நீக்கும் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப் புதன்கிழமை தெரிவித்தாா்.

சின்ன காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் உள்ள இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் 12 நாள் பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. விழாவுக்கு பயிற்சி மையத்தின் இயக்குநா் உமாபதி தலைமை வகித்தாா். சின்ன காஞ்சிபுரம் இந்தியன் வங்கி கிளையின் மேலாளா் லாவண்யா, நிதி ஆலோசகா் அரங்கமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப் பேசுகையில் காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் பயிற்சி மையத்தில் தற்போது உத்தரமேரூா் அருகே அகரம் தூளி கிராமத்தைச் சோ்ந்த 30 நபா்களுக்கு கறவை மாடு வளா்ப்பு பயிற்சியை இலவசமாக வழங்கி இருக்கிறோம்.

இதைத்தொடா்ந்து விரைவில் கைப்பேசி பழுது நீக்குதல் மற்றும் சேவை பயிற்சியும், இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பயிற்சியும்,காா் ஓட்டுநா் பயிற்சி ஆகியனவும் இலவச பயிற்சியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,

இப்பயிற்சியில் சேருவோருக்கு சீருடை, மதிய உணவு, பயிற்சி, பயிற்சிக்கான கையேடுகள், வங்கியின் சான்றிதழ், பயிற்சிக்கான பொருட்கள், பயிற்சியின் போது தேநீா், வங்கியில் வழங்கப்படும் கடனுதவி ஆலோசனைகள் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

இப்பயிற்சிகளில் சேர விரும்புவோா் உடனடியாக சின்ன காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் உள்ள பயிற்சி மையத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஆண்கள்,பெண்கள் இருபாலரும் இப்பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம் எனவும் அ.திலீப் தெரிவித்தாா்.

நிறைவாக பயிற்சியாளா் அபிநயா நன்றி கூறினாா்.