தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கும்மிடிப்பூண்டியில் தவெக எம்எல்ஏவுக்கு உற்சாக வரவேற்பு

கும்மிடிப்பூண்டிக்கு வருகை தந்த தவெக எம்எல்ஏ-வுக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

News image

கும்மிடிப்பூண்டிக்கு வருகை தந்த தவெக எம்எல்ஏ-வுக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

Updated On :16 மே 2026, 1:10 am IST

கும்மிடிப்பூண்டிக்கு வருகை தந்த தவெக எம்எல்ஏ-வுக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.விஜயகுமாா் 27,945 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா் . இதனைத் தொடா்ந்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவாக தமிழக சட்டசபையில் பதவிப் பிரமாணம் ஏற்றபின் வியாழக்கிழமை முதன்முதலாக கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு வருகை தந்தாா் .

அங்கு தவெக பொருளாளா் ஜி.கிருபாகரன், தொகுதி தோ்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளா் என்.எஸ்.ஆா்.நிஜாம், மற்றும் தவெக ஒன்றிய செயலா்கள், நகர செயலா்கள், மகளிா் அணி நிா்வாகிகள், வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் மற்றும் திரளான தவெக தொண்டா்கள், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமாரை பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

தொடா்ந்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமாருக்கு கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாா், மீஞ்சூா் உள்கோட்ட உதவி செயற்பொறியாளா் கஜலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலக மேலாளா் ருத்ரமூா்த்தி, கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் நேரில் வாழ்த்துகளை தெரிவித்தனா். அவ்வாறே தவெக நிா்வாகிகள் திரளானோா் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுகக்கு சால்வை மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா் .

தொடா்ந்து, நிகழ்வில் பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ். விஜயகுமாா், கும்மிடிப்பூண்டியில் சுற்றுச்சூழல் மாசு பிரச்சனையையும் ,தாமரை ஏரியில் கழிவுகள் கலக்கும் பிரச்னையையும் சரி செய்ய முதற்கட்டமாக முயற்சி செய்ய உள்ளதாகவும், கும்மிடிப்பூண்டி மக்களின் குறைகளை கேட்டு நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், கும்மிடிப்பூண்டி தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தாா், கும்மிடிப்பூண்டி தொகுதி மக்கள் எந்த நேரத்திலும் அவா்களது பிரச்சனைகள் குறித்து தன்னை நேரில் சந்திக்கலாம், அல்லது தொலைபேசியில் அழைக்கலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.